தொட முடியாத ஒரு இசை போல உன் நினைவுகள் தனிமையின் குளத்தில் கல் எறிகின்றன

தனிமை தன் கோப்பையில் உன்னையே திரும்பத் திரும்ப ஊற்றிக் கொள்கிறது.

நாம் நடந்த தெருக்களில் நினைவுகள் மிதிபடுகின்றன.

முடிந்த பிறகும்
கேட்கிறது
உன்
பாடல்

உன் தேடலில் நான் கிடைப்பதேயில்லை

மழையில்
நனைகிறது
மழை
யாரும்
பார்க்காமலே

அன்பென்றும் நட்பென்றும்

முடிவுறாத ஒரு நெடும் பயணத்தில் நானும் நீங்களும் சந்தித்துக் கொள்கிறோம். சட்டெனக் கலையும் ஒரு கனவு போல இருக்கிறது இந்த உலக வாழ்க்கை. அக் கனவே நம் ஒவ்வொருவரினதும் நிழல்களுக்குள் ஊடுபாவி வெவ்வேறு திசையில் இருக்கும் எங்களை ஒரு புள்ளியை நோக்கிப் பார்க்கச் செய்கிறது.

எழுத்தும் வாசிப்பும் வாழ்க்கைக் கோப்பைக்குள் நிறைந்திருக்கும் தனிமையை மெல்ல அகற்றுகிறது.என் தனிமையை அகற்ற நான் தேடிக் கொண்ட சாதனங்கள்தான் புத்தகங்களும் வாசிப்பும்.

அவை என் அக உலகில் மெல்ல மெல்ல இறங்குகின்றன. உதிரமெங்கும் இழையோடி வாழ்வை முன் நோக்கித் தள்ளுகின்றன. நன்றி என் சக பயணிகளே! என் பயணத்தில் பங்கெடுப்பதற்கும் பக்கத்தில் இருப்பதற்கும்.

எழுத்தும் வாழ்க்கையும்

மலைப்பாடகன் – சக மனிதருக்கான குரல்

கனவின் மீதி - அசுரன் நகரில் நானொரு கனவு நாயகன் கிரனைட் கற்களைச் செதுக்கி கட்டப்பட்டது எந்தன் பண்ணை வீடு குளிரெடுக்கும் வீட்டினுள் அமர்வதற்கோ நீர் இருக்கை

பணம் தேடும் உலகில் ரசனைக்கான இடம் பூச்சியமாக இருக்கிறது – ஓவியர் ப்ரியந்த நந்தன

ஓவியர் ப்ரியந்த நந்தன ஸ்பெயினில் நடைபெற இருக்கும் ஓவியக் கண்காட்சிக்காக கொழும்பில் இருக்கும் தனது வேலைத்தளத்தில் ஓவியங்களை தயார்படுத்திக் கொண்டிருந்தார். ப்ரியந்த குருனாகலை,அலவ்வயைச் சேர்ந்தவர்.ஓவியத்தின் மூலம் ஜீவிக்கலாம்

எங்கிருந்து நான் வருகிறேன்

நான் பூமியில் இருந்து வருகிறேன் பூமிக்கு வருகிறேன் ஆபிரிக்காவின் இதயத்திலிருந்து ஆசியாவின் சிறுநீரகங்களிலிருந்து இந்தியாவிலிருந்து வாசனைத் திரவியங்களுடன் வருகிறேன்   ஆழமான ஒரு அமேஸன் காட்டிலிருந்து ஐவரி

மூவர்- තුන්දෙනෙක් -மற்றவரைத் தேடிய பயணம்

போர்க் காலத்தையும் போருக்குப் பிந்திய காலத்தையும் மையமாகக் கொண்டு இலங்கையில் சினிமா முயற்சிகள் நடைபெற்றிருக்கின்றன.இதில் பிரசன்ன விதானகே,அசோக ஹந்தகம,விமுக்தி ஜயசுந்தர ஆகிய மூன்று இயக்குநர்களும் தமது திரைப்படங்களை

இலையில் தங்கிய துளிகள்

[rev_slider alias=”new”]

சந்திப்புகள்

எவ்வளவோ இருக்கு கேட்க…

கனவுகளும் விடியலைப் போலத்தான் எப்போதும் இருந்து கொண்டே இருக்கின்றன.

வா எனதும் உனதுமான உலகத்தை மெய்ப்படும் கனவுகள் கொண்டு நிரப்புவோம்!