நீரில் எழுதப்பட்டிருக்கும் மீனை பூனை வாசிக்கிறது- கவிதைச் செயல் அனுபவம்

கவிஞர் அஹமது ஃபைஸல் தனது “நீரில் எழுதப்பட்டிருக்கும் மீனை பூனை வாசிக்கிறது“கவிதைத் தொகுதியை எனக்கு தபாலிட்டிருந்தார். கவிஞருடன் நெருங்கிப் பழகிய அனுபவமோ அவரை நேரில் சந்தித்ததோ கிடையாது.அவரது அன்பை நான் மெச்சுகிறேன். புத்தகத்தை எனது குட்டித் தங்கை புரட்டிப் பார்த்தாள்.உள்ளே இருக்கும் அறிமுகக் குறிப்பில் படித்து அவரது “ஆயிரத்தோராவது