இருப்பதற்கென்று வருகிறோம் இல்லாமல் போகிறோம்

இன்றைய நாட்களில் அதிகமான திடீர் மரணச் செய்திகள் கேள்விப்பட்ட வண்ணமே இருக்கின்றன. நினைத்திராதவர்கள் எல்லாம் வாழ்க்கைக்கு விடை சொல்லிக் கிளம்பிக் கொண்டிருக்கிறார்கள்.ஒவ்வொரு மரணச் செய்தியும் வாழ்க்கையின் பிடிமானத்தை சற்றே ஆட்டம் காணச் செய்கிறது.நமக்குப் பரிச்சயமான,அறிமுகமானவர்களின் மரணம் இரட்டிப்பு வலியைத் தருகிறது. அண்மையில் எழுத்தாளர் குமரகுரூபரனின் மரணச் செய்தி கேட்டு

இன்ஸாபின் ‘ஒவ்வொரு பொழுதில் ஒவ்வொரு வாழ்க்கை’ : வாழ்விற்கான தேடல்கள் பற்றிய அவதானிப்பு – அனார்

இன்ஸாப் அவர்களின் “ஒவ்வொரு பொழுதில் ஒவ்வொரு வாழ்க்கை” நூலைப் புரட்டும்போது,‘மரணம் ஒரு பக்கத்து நண்பன்’ - என்ற தலைப்பு முதலாவதாக என் கண்களை மோதியது. எனக்குள்ளாகவே கூர்மையான ஒரு மின்னல் வெட்டிச் சென்றது. மரணத்தை நிகழ்த்துவதற்காக திட்டமிடக்கூடிய மனதிடம் இருந்த கவிதைத்துயர், அதை மூடிக் கவிந்திருக்கும் நினைவின் கருமையைத்தான்

சுவர்களோடு பேசுதல்

ஒரு முதியவர் இறக்கும் போது ஒரு உலகம் முடிந்து போகிறது என்பார்கள்.வயோதிபம் ஒரு காவியத்தின் முடிவுறும் தருணம் போன்றது. அவ்வளவு பரிவு மிகுந்த அந்த வயதின் இயல்புகளை சாதாரணமாகப் புரிந்து கொள்ள முடியாது.வாழ்க்கையை முடித்துக் கொள்ளக் காத்திருக்கும் ஒருவரை நாம் நெருக்கமாகக் காணும் போது முகத்தின் மீது படிந்துள்ள

ஹோகானா பொகுன- வானம் போல விரியும் கனவுகள் தேடி…

பார்த்துத் தீராத ஒரு ஆச்சரியமாக கடல் நமக்கு முன்னாள் விரிந்து கொண்டே இருக்கிறது. கடலும் அதன் அலைகளும் அது எழுப்பும் சத்தமும் இந்த உலகில் எல்லோரையுமே கவர்ந்திருக்கின்றன.கடலைப் பார்த்திராத ஒரு கிராமத்து மாணவர்கள் கடல் பார்க்க ஆசைப்படுவதும் அதனூடு விரியும் நினைவுகளையும் மையப்படுத்தி அண்மையில் வெளிவந்த திரைப்படம்தான் “ஹோகானா

கொங்க்ரீட் காடுகளில் தொலையும் வாழ்க்கை

“கிராமம்,பாட்டிகளின் சுருக்குப் பையில் உள்ள சில்லறைகளைப் போன்றது.சுருக்குப் பைகளின் உலகம் வேறு உலகம்.அதன் முடிச்சுக்கள் பிரியங்களால் ஆனவை. காலத்தின் இடுப்பில் அதே பழைய வாஞ்சையுடன் நிராதரவாய்த் தொங்கிக் கொண்டிருப்பவை.அதன் எளிமையும் அழகும் எந்தவிதத்திலும் நம்மை நோக்கிச் சவால் விடாதவை. ஒரு மலைப் பிரதேசத்துக் காற்று மாதிரி எப்போது கேட்டாலும்