About insaf

This author has not yet filled in any details.
So far insaf has created 10 blog entries.

வான்கா: குழந்தைகளின் வானம்

ரஷ்ய எழுத்தாளர் அன்டன் செகோவினுடைய வான்கா எனும் சிறுகதையைத் தழுவி மலையாலத்தில் இயக்குனர் ஜெயராஜினால் எடுக்கப்பட்ட திரைப்படத்தை நண்பர் பஷீர் இந்தியாவிலிருந்து அனுப்பி வைத்திருந்தார்.இதனை நிச்சயம் பார்க்குமாறு எனக்குப் பரிந்துரைத்தார். ஓன்றரை மணிநேரம் ஒடும் இத் திரைப்படம் ஒரு காவியம் போல மனதில் நின்றுவிட்டது. குட்டப்பாயி ஒன்பது வயது

ஒரு கூர்வாளின் நிழலில் – கண்ணீரின் சாட்சியம்

தமிழினியின் “ஒரு கூர்வாளின் நிழலில்“ ஒரு போராளியின் வாழ்நாள் சாட்சியமாக நமக்கு முன் நிற்கிறது.சாதாரண பாடசாலைச் சிறுமியாய் இருந்து 20 வருட போராட்ட வாழ்வில் நுழைந்து, ஒரு கைதியாய் பிடிபட்டு நோயின் காரணமாக மரணித்துப் போகும் வரையான காலத்தை உயிரோட்டமாய் பதிவு செய்திருக்கிறார். தமிழினியின் வாழ்நாளில் தனக்கு முன்னால்

இருப்பதற்கென்று வருகிறோம் இல்லாமல் போகிறோம்

இன்றைய நாட்களில் அதிகமான திடீர் மரணச் செய்திகள் கேள்விப்பட்ட வண்ணமே இருக்கின்றன. நினைத்திராதவர்கள் எல்லாம் வாழ்க்கைக்கு விடை சொல்லிக் கிளம்பிக் கொண்டிருக்கிறார்கள்.ஒவ்வொரு மரணச் செய்தியும் வாழ்க்கையின் பிடிமானத்தை சற்றே ஆட்டம் காணச் செய்கிறது.நமக்குப் பரிச்சயமான,அறிமுகமானவர்களின் மரணம் இரட்டிப்பு வலியைத் தருகிறது. அண்மையில் எழுத்தாளர் குமரகுரூபரனின் மரணச் செய்தி கேட்டு

இன்ஸாபின் ‘ஒவ்வொரு பொழுதில் ஒவ்வொரு வாழ்க்கை’ : வாழ்விற்கான தேடல்கள் பற்றிய அவதானிப்பு – அனார்

இன்ஸாப் அவர்களின் “ஒவ்வொரு பொழுதில் ஒவ்வொரு வாழ்க்கை” நூலைப் புரட்டும்போது,‘மரணம் ஒரு பக்கத்து நண்பன்’ - என்ற தலைப்பு முதலாவதாக என் கண்களை மோதியது. எனக்குள்ளாகவே கூர்மையான ஒரு மின்னல் வெட்டிச் சென்றது. மரணத்தை நிகழ்த்துவதற்காக திட்டமிடக்கூடிய மனதிடம் இருந்த கவிதைத்துயர், அதை மூடிக் கவிந்திருக்கும் நினைவின் கருமையைத்தான்

ஹோகானா பொகுன- வானம் போல விரியும் கனவுகள் தேடி…

பார்த்துத் தீராத ஒரு ஆச்சரியமாக கடல் நமக்கு முன்னாள் விரிந்து கொண்டே இருக்கிறது. கடலும் அதன் அலைகளும் அது எழுப்பும் சத்தமும் இந்த உலகில் எல்லோரையுமே கவர்ந்திருக்கின்றன.கடலைப் பார்த்திராத ஒரு கிராமத்து மாணவர்கள் கடல் பார்க்க ஆசைப்படுவதும் அதனூடு விரியும் நினைவுகளையும் மையப்படுத்தி அண்மையில் வெளிவந்த திரைப்படம்தான் “ஹோகானா

கொங்க்ரீட் காடுகளில் தொலையும் வாழ்க்கை

“கிராமம்,பாட்டிகளின் சுருக்குப் பையில் உள்ள சில்லறைகளைப் போன்றது.சுருக்குப் பைகளின் உலகம் வேறு உலகம்.அதன் முடிச்சுக்கள் பிரியங்களால் ஆனவை. காலத்தின் இடுப்பில் அதே பழைய வாஞ்சையுடன் நிராதரவாய்த் தொங்கிக் கொண்டிருப்பவை.அதன் எளிமையும் அழகும் எந்தவிதத்திலும் நம்மை நோக்கிச் சவால் விடாதவை. ஒரு மலைப் பிரதேசத்துக் காற்று மாதிரி எப்போது கேட்டாலும்

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்

‘வாழ்வதற்கான பக்குவத்தை யாரும் திருமணப் பத்திரிகையில் அச்சடிப்பதில்லை’ இந்த வாசகத்தை என் முகநூல் பக்கத்தில் எப்போதோ நான் பகிர்ந்திருக்கிறேன். இச் சிறிய வாசகத்தில் ஆயிரம் அர்த்தங்கள் நிறைந்திருக்கின்றன. திருமணம் என்பது வாழ்க்கையில் நடக்கும் ஒரு முக்கிய நிகழ்வு. பிறந்ததற்குப் பிறகு மனிதன் கொண்டாடப்படும் இரண்டாவது தருணம் அது. வாழ்க்கையில்

இன்னும் கொடுக்காத பரிசு…

“கொடுப்பவரின் விருப்பமும் பெற்றுக் கொள்பவரின் விருப்பமும் இணையும் ஒரு அபூர்வமான தருணத்தில்தான் ஒரு உண்மையான பரிசு உருவாகிறது. வாழ்க்கையில் எல்லா பரிசுகளுக்கும் ஒரு விலை இருக்கிறது.அது கடையில் செலுத்தப்படும் விலை மட்டுமல்ல:நமது வாழ்க்கையில் செலுத்தும் விலை. நமது இதயத்தின் ஆழத்தில் செலுத்தும் விலை அது. “ னுஷ்யபுத்திரன். பரிசுகள்

தாய் மொழியில் அமைந்த படைப்பாக்கக் கல்வியே இன்றைய தேவை – ஆயிஷா இரா. நடராசன்

இரா. நடராசன் , 2014 ஆம் ஆண்டிற்கான பால சாகித்திய அகாதமி விருது பெற்ற சிறுவர்இலக்கிய எழுத்தாளர் இவர் எழுதிய ஆயிஷா எனும் சிறுகதை ஏற்படுத்தியதாக்கத்தால் இவர் ஆயிஷா நடராசன் என்ற பெயரால் அழைக்கப்படுகிறார்.எளியதமிழில் அறிவியல் கருத்துகளையும், சில மொழி பெயர்ப்பு நூல்களையும்,மாணவர்களுக்கு உதவக்கூடிய எளிய அறிவியல் சோதனைகள்

எழுத மறந்த கடிதம்…

கடிதம் எழுதும் பழக்கம் இன்று முற்றாகக் குறைந்து போய் விட்டது. எல்லோரினதும் கடந்த காலம் என்பது எண்ணற்ற கடிதங்களால் நிரம்பியிருக்கின்றது. பாடசாலைக் காலத்தில் தமிழ்ப் பாடத்தில் கடிதம் எழுதும் வழக்கம் இருக்கின்றது.எமது பிறந்த நாளைக்கு அழைத்தோ, வாழ்த்தியோ தொலை தூர நண்பர் ஒருவரை கற்பனை செய்து கொண்டு கடிதம்